ஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலகக் கலை இலக்கிய மண்றம் ஆர்வலர்கள் போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கடந்த 09 ஆம் மாதத்திற்கான கவிதை போட்டியின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று. அவற்றைத் தெரிந்துகொள்ளும் முன்னர், போட்டியைச் சிறப்பாக நடத்தித்தந்த நடுவர்கள் , போட்டியாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இக்கவிதைப் போட்டியில் பங்காற்றிய படைப்பாளிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்!
போட்டியின் பணப்பரிசைப் வெல்லும் முதல் வெற்றியாளர்:
கவித்தென்றல். ஐயாக்குட்டி தேவராஜா (இலங்கை)

சான்றிதழைப் பெறும் இரண்டாம் வெற்றியாளர் : கவிமணி. துரை தனபாலன் (இந்தியா)

சான்றிதழைப் பெறும் மூன்றாம் வெற்றியாளர் : கவிதாயினி. தர்மதா (நித்யா தர்மசீலன்) (ஆஸ்ரேலியா)

வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்களின் கவிதைகள் அடுத்து வரும் ஆதியுலகம் இதழில் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
போட்டியில் பங்காற்றிய படைப்பாளிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதோடு, தொடர்ந்து வரும் போட்டிகளில் சிறந்த படைப்புகளை எழுதி தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்! அத்தோடு இந்த மாதத்திற்கான கவிதைப்போட்டிக்கான அறிவிப்பை (https://aadhiulakam.com/?p=6877 ) இந்த லிங்கை அழுத்தி உள் நுழைந்து போட்டியின் விபரங்களை பார்வையிடலாம்.
நன்றி
ஆதியுலகம்.