நெதர்லாந்த் வெனிஸ்நெதர்லாந்தில் அமைந்துள்ள ஒரு கிராமமானது மொத்தமும் தண்ணீரால் சூழப்பட்டு வெனிஸ் போலவேகாட்சியளிக்கின்றது.
சாலைகளோ கரும்புகை கக்கும் வாகனங்களோ ஏதுமற்ற அந்த நீர் சூழ் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்துஇன்னொரு வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் அங்கு அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் அல்லது படகையேபயன்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்தமாக 2,600 குடிமக்களே வாழும் அந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் அமைந்துள்ளஅனைத்து குடியிருப்புகளும் குட்டித்தீவுகளாகவே காட்சி தருகின்றன. குளிர்காலத்தில் பனிச்சறுக்கு ஆடதோதானதாக இருக்கும் என்பது சிறப்பு.
இப்பகுதிக்கு வருகைதரும் அனைத்து பயணிகளையும் அவர்களது வாகனங்களை கிராமத்தின் வெளியே விட்டுவரபணிக்கின்றனர். அங்கிருந்து படகு மூலமே இப்பகுதிக்கு வரமுடியும்.
அதிக சத்தமற்ற படகு சவாரி, அதன்பின்னர் கால்நடையாகசில அடி தூரம் நடந்து வந்தாலே நெதர்லாந்தின் வெனிஸ் வந்துவிடும்.
சில மீற்றர் ஆழம் கொண்ட இந்த நீர்ப்பகுதியை இங்குள்ள Christain துறவிகளே ஆழப்படுத்தி அதை படகுசவாரிக்கு உகந்ததாக மாற்றியுள்ளனர் என்பது சிறப்பு





